நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே ______ உண்டாயிற்று?
யூதாவிலுள்ள ______ ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்?
யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய மனுஷனுடைய பேர் என்ன?
எலிமெலேக்கின் மனைவி பெயர் என்ன?
எலிமெலேக்குக்கு எத்தனை குமாரர்கள் இருந்தார்கள்?
நகோமி மற்றும் எலிமெலேக்கின் குமாரர்கள் யார்?
நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு எத்தேசத்தில் இறந்துபோனான்?
எலிமெலேக்கின் குமாரர்கள் எங்கே பெண் கொண்டார்கள்?
எலிமெலேக்கின் மருமகள்கள் பெயர் என்ன?
எலிமெலேக்கும், குடும்பத்தாரும் மோவாபில் எத்தனை வருடம் வாசம்பண்ணினார்கள்?
தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானவள் யார்?
கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு _____ அருளினார் என்று நகோமி மோவாப் தேசத்தில் கேள்விப்பட்டாள்?
யூதாதேசத்திற்குத் திரும்பிப்போகையில் நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் ________ திரும்பிப்போங்கள் என்றாள்?
ஒர்பாள், மற்றும் ரூத்தை முத்தமிட்டது யார்?
உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன்கூட வருவோம் என்று சொன்னது யார்?
இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ? யார் யாரிடம் கூறியது?
கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள்நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்று கூறியது யார்?
தன் மாமியை முத்தமிட்டு திரும்பி போனது யார்?
தன் மாமியை விடாமல் பற்றிக்கொண்டது யார்?
நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். யார் யாரிடம் கூறியது?
ரூத் யரோடேகூட போக மன உறுதியாயிருந்தாள்?
ரூத் மற்றும் நகோமி பெத்லெகேமுக்கு வந்தபோது, ______ எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டர்கள்?
நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், ______ என்று சொல்லுங்கள் என்று, நகோமி பெத்லெகேம் ஊராருக்கு சொன்னள்?
மாராள் என்பதின் அர்த்தம் என்ன?
நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவருகையில் எது அறுப்பின் துவக்க காலமாயிருந்தது?
நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார் கூறியது யார்?